கோழி இறைச்சி கறிக்கு பதிலாக மாட்டு இறைச்சி கறி: தாக்குதலில் 3 பேர் காயம்
களுத்துறை மாவட்டத்தின் வெலிப்பன்ன களஞ்சியசாலை சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கும், உணவக ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த உணவகத்திற்கு சென்ற வாடிக்கையாளர் அங்கு கோழி இறைச்சிக் கறியை கொண்டுவர உத்தரவு (ஓடர்) செய்த நிலையில், மாட்டு இறைச்சி கறி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தாக்குதலில் முடிவடைந்துள்ளது.
மோதலை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் வருகை தந்ததுடன், தாக்குதலில் காயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டு மத்துகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்