கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை!
இந்தியாவில் கொல்கத்தாவை சேர்ந்த பெண் மருத்துவரேயே பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை விதித்துள்ளது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 திகதி கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயதுடைய பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்தில் பொலிஸாருக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தியதில் ஆதாரத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த நவம்பர் 12 திகதி முதல் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி அனிா்பன் தாஸ் சனிக்கிழமை அளித்த தீா்ப்பில், சஞ்சய் ராய்க்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நிருபித்து பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திலும் அவரின் குரல்வளையை நெரித்து, அவரின் முகத்தை இறுக்கி மூடி அவரை உயிரிழக்க வைத்த குற்றத்திலும் “சஞ்சய் ராய் குற்றவாளி” என தீா்ப்பளித்து ஆயுள் தண்டணை விதித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்