கெஹலியவின் பெயர் நீக்கம்

கொழும்பு, வத்தேகம கல்வி வலயத்தின் கண்டி, குண்டசாலை பிரிவுக்குட்பட்ட ‘கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்பப் பாடசாலை’ என்ற பெயரை உடனடியாக மாற்றுவதற்கு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் நேற்று புதன் கிழமைஅனுமதியளித்துள்ளார்.

கண்டியில் உள்ள பாடசாலைகளில் ஊழல் அரசியல்வாதிகளின் பெயர்களை நீக்குமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து மாகாண கல்வி திணைக்களத்தின் கட்டமைப்பு குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இப்பாடசாலை இனி குண்டசாலை அரச ஆரம்பப் பாடசாலை என அழைக்கப்படும்.

இதேவேளை, மினிபே கல்வி வலயமான தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் பெயரை மாற்றவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கல்வி அமைச்சின் 1996 ஆம் ஆண்டு சுற்றறிக்கை உயிருடன் இருக்கும் நபர்களின் பெயரை பாடசாலைகளுக்கு வைப்பதை தடை செய்துள்ளதாக வலியுறுத்தினார்.

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் கொள்முதல் ஊழலில் கெஹலிய ரம்புக்வெல்ல ஈடுபட்டிருந்த போதிலும், அவரது பெயரை பாடசாலைக்கு வைத்திருப்பது பொருத்தமற்றது என அவர் மேலும் தெரிவித்தார்.