
குச்சவெளி கைநாட்டான் குளக்கட்டினை பாதுகாக்கும் வேலைகள் ஆரம்பம்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட கைநாட்டான் குளத்தின் அணைக்கட்டை பாதுகாக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை காரணமாக தற்போது பெய்து வருகின்ற தொடர் மழையினால் கைநாட்டான் குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் மற்றும் விவாசாய சம்மேளனங்கள் இணைந்து பிரதேச சபையின் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த நிலையில் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் வெ.இந்திரஜித் கட்டளைக்கமைய பிரதேச சபையின் ஊழியர்கள், இராணுவ படையினர், விவசாய சம்மேளன உறுப்பினர்கள், பொதுமக்கள் இணைந்து கைநாட்டான் குளக்கட்டிற்கு மண் அணைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்