கிழக்கு மாகாண பிரதேச சிவில் வலையமைப்பு நடாத்தும் மனித உரிமைகள் தின நிகழ்வு நாளைய

-மூதூர் நிருபர்-

அகம் மனிதாபிமான வள நிலையத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண பிரதேச சிவில் வலையமைப்பு நடாத்தும் மனித உரிமைகள் தின நிகழ்வு நாளைய தினம் புதன் கிழமை திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது காலை 9 மணியளவில் சிவன்கோவிலடியில் இருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகி குளக்கோட்டன் மண்டபத்தை சென்றடையவுள்ளது.

வடக்கு கிழக்கில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, உண்மை மற்றும் பொறுப்பு கூறல், கூட்டுப்படுகொலைகளுக்கான நீதி, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம், அரசியல் கைதிகளின் விடுதலை, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கல், மீனவர்களுக்கான நிவாரணம் வழங்கல், பன்முகப்படுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் பெண்களுக்கான தீர்வு, 76 வருட தேசிய இனப்பிரச்சிக்கான நிலையான அரசியல் தீர்வு போன்ற விடயங்களை உள்ளடக்கிய கோரிக்கைகள் குறித்து, கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெறவிருக்கின்ற நிகழ்வின் இறுதியில் குறித்த விடையங்களை உள்ளடக்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக கிழக்கு ஆளுநரிடம் கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளினால் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்