கிழக்கு ஆளுனர் செயலக செயலாளராக அருள்ராஜ் நியமனம்

-கிண்ணியா நிருபர்-

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனம் இன்று திங்கட்கிழமை திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது

ஜெ. எஸ். அருள்ராஜ் முன்னாள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் என பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்