![காதலர்களை வாடகைக்கு எடுக்க முடியும் ஆனால் முன் பதிவு கட்டாயம்](https://minnal24.com/wp-content/uploads/2023/07/Untitled-Project-14-1.jpg)
காதலர்களை வாடகைக்கு எடுக்க முடியும் ஆனால் முன் பதிவு கட்டாயம்
உலக அளவில் காதலும், திருமணமும் ஒவ்வொரு தன்மையைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாட்டு கலாச்சாரமும் தங்கள் இயல்புக்கு ஒத்த காதலையும், திருமண நடைமுறையையும் கொண்டுள்ளன. ஆனால், எல்லா நாட்டிலும் இளைஞர்கள் காதலை தேடி அலைவது என்பது இயல்பான ஒன்றாகதான் உள்ளது. பதின்பருவ இளைஞர்களுக்கு காதல்தான் மிகப் பெரிய பிரச்னையாகவே உள்ளது.
இந்தநிலையில், இளைஞர்களுக்காக ஜப்பான் அரசு புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. ஜப்பானில் ஏராளமான இளைஞர்கள், இணை கிடைக்காமல் மனதளவில் சோர்வடைந்துள்ளனர். இதனால், காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் திட்டத்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது ஒரு மணிநேரத்திற்கு 3,000 ரூபாய்க்கு காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாமாம். ஆனால், குறைந்தபட்சம் 2 மணிநேரத்திற்கு அவர்களை வாடகைக்கு எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி இணையை தேர்வு செய்யும் இணையதளத்திற்கு முன்பணமும் செலுத்த வேண்டும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்