காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
புத்தளம் – ஆனமடு பொலிஸ் பிரிவுக்கு உபட்ட ரம்பேயாய பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆணமடு பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் – ஆனமடு பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்