கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் கடலரிப்பினால் பாதிப்பு

-அம்பாறை நிருபர்-

கடலரிப்பு காரணமாக கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் எல்லைச் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.

கரையோரம் பேணல் திணைக்களம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் கடலரிப்பை கட்டுபடுத்துவதற்கு முன்வர வேண்டுமென பள்ளிவாசல் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் பின்புறமாக அமைக்கப்பட்ட தென்னந்தோட்டமும் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு அங்குள்ள சில தென்னை மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க