கணவரின் அந்தரங்க உறுப்பை கத்தியால் குத்திய காதல் மனைவி
இந்தியா – பீகார் மாநிலம் சீதாமரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சூர்யபூஷண் குமார். இவர் துணை ராணுவப் படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் நேஹா குமாரி என்ற பெண்ணுக்கும் காதல் இருந்தது.
இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நேஹா சூர்யபூஷனை நீண்ட காலமாக வற்புறுத்தி வந்துள்ளார். காதலியின் அழுத்தத்தின் காரணமாக சூர்யபூஷண் தனது வீட்டாருக்கு தெரியாமல் பாட்னாவிற்கு வந்து, அங்கு தனது காதலி நேஹாவை பதிவு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் இருவரும் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். திருமணமாகி ஒரு நாள் கடந்த நிலையில், நேஹாவை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமான செய்தியை சூர்யபூஷண் கூறியுள்ளார். தனது வீட்டில் திருமணத்திற்கு பெண் பார்த்துள்ளதாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்துகிறார்கள் என்ன செய்வது என புதுமனைவியிடம் கேட்டுள்ளார்.
வீட்டாரிடம் உண்மை பேசி திருமண ஏற்பாடுகளை நிறுத்துங்கள் என கணவரிடம் கூறியுள்ளார். ஆனால்இ கணவரோ பிடிகொடுக்காமல் பேசவே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒன்று நான் உண்ணை கொன்றுவிடுவேன் அல்லது தற்கொலை செய்துகொள்வேன் என காதல் மனைவி கணவரை மிரட்டியுள்ளார்.
இந்த சண்டை ஒரு கட்டத்தில் தீவிரமடைந்தது, தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து காதல் மனைவி கணவரின் அந்தரங்க உறுப்பில் குத்தி தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு ஆளான கணவர் வலியால் துடித்து ஹோட்டல் ஊழியர்களிடம் சம்பவத்தை கூறி அவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இச் சம்பவம் பொலிநாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் காதல் மனைவி கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்