எலிக்காய்ச்சல் தொடர்பில் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் விழிப்புணர்வு
அம்பாறை மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் தொடர்பில் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் களப்பணி நிகழ்ச்சி காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வசீர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகிறது. அதன் ஒரு அங்கமாக எலிக்காய்ச்சல் பரவும் வழிமுறைகள் மற்றும் அவற்றிலிருந்து எவ்வாறு எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
மேலும் எலிக்காய்ச்சல் குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ள இலவசமாக தடுப்பு மருந்துகளை பெற்று கொள்ள உங்கள் பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளை அல்லது வைத்தியசாலைகளை நாட முடியும் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அறிவித்தல் வெளியிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்