உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி
-பதுளை நிருபர்-
மஹியங்கனை மாதுரு ஓய வனப்பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்களை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 39 வயதுடைய 56 ஆம் கட்டை கொடபொருயாய வேவத்த மஹியங்கனை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வனப்பகுதிக்கு வேட்டையாடுவதற்காக நால்வர் சென்றதாகவும், அவர்கள் கொண்டு சென்ற உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, தவறுதலாக வெடித்ததில் குறித்த நால்வரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்