உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்: விசாரணை முடிவு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை முடிவுறுத்தியுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்றின் இரகசிய வியாக்கியானம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற விசாரணையை நிறைவு செய்து உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட நான்கு தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்