உடல் ஆரோக்கியம் குறிப்புகள்

உடல் ஆரோக்கியம் குறிப்புகள்

உடல் ஆரோக்கியம் குறிப்புகள்

🔷உடல் வலிமை பெற, அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும்.

🔷சுகப்பிரசவம் ஆக – ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான  பிரசவம் ஏற்படும்.

🔷குடல் புண் ஆற – வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

🔷நரம்பு தளர்ச்சி நீங்க – தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.
🔷காய்ச்சல் குணமாக – செண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.
🔷நாக்கில் புண் ஆற – அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.
🔷வீக்கம் குறைய – மல்லிகைப்பூவை அரைத்து வீக்கமுள்ள இடங்களில் தடவிவர வீக்கம் குறைந்து குணமாகும்.
🔷நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது விரைவில் மரணத்தை வரவழைக்கிறது. ஒரு நாளைக்கு, ஒன்பதரை மணி நேரத்திற்கும் குறைவாக அமர்ந்திருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், தினமும் 11 மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்திருப்பவர்களுக்கு மரணத்திற்கான ஆபத்து 57% அதிகம் என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன
🔷வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும்.
🔷தொண்டையில் ஏற்படும் நோய்களை தேன் குணப்படுத்தும். தேன் கிருமிநாசினியாக வேலை செய்யும். தொண்டை கட்டிக் கொண்டு பேச முடியாமல் இருந்தால், தேனும் சுண்ணாம்பும் கலந்து கழுத்தில் கடவ வேண்டும்
🔷தினமும் காலையில் 5 சின்ன வெங்காயம் 1 பூண்டு சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கு நல்லது. காரட் சாறு குடித்தால் இதயத்திற்கு நல்லது. அதில் பெருமளவு கரோட்டின் உள்ளது.
🔷பேரீச்சம் பழத்தைத் தேனில் 3 நாட்கள் ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 வீதம் 3 வேளை சாப்பிட்டால், இதயம் மற்றும் மூளை நரம்புகள்  வலிமை பெறும் இரத்தம் ஊறும்.
🔷நுரையீரல் நோய்களுக்கு வெற்றிலைச் சாறு நல்லது. நுரையீரல் கப நோய் நீங்க, தேவையான தூதுவளை, முசுமுசுக்கை இலைகளை சுத்தம் செய்து, இத்துடன் புதினா, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நெய்யில் வதக்கி துவையலாக அரைத்து, சூடான சாதத்தில் சேர்த்து  சாப்பிட வேண்டும்.
🔷தொண்டைப்புண் சரியாவதற்கு சுடுநீரில் உப்பு போட்டு 1 நாளைக்கு 2 அல்லது 3 தடவை கொப்பளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 தடவை 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் தொண்டைப்புண் ஆறும். மேலும் உப்பு, தயிர், வெங்காயக் கலவை தொண்டைப் புண்ணை ஆற்றும்.
🔷
பல்வலி வந்தால் ஒரு பூண்டை உரித்து, மணிக்கட்டில் நாடித்துடிப்பு இருக்கும் இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும். இடது பக்கம் பல்லில் வலி இருந்தால் வலது புற மணிக்கட்டிலும், வலது பக்கம் பல்லில் வலி இருந்தால் இடது மணிக்கட்டிலும் கட்டுப் போட வேண்டும்.
🔷நல்ல குரல் வளம் கிடைக்க ஆடாதொடையின் இலையை சிறிது சிறிதாக நறுக்கி 4 டம்ளர் தண்ணீர் விட்டு 1 டம்ளர் ஆகும் வரை காய்ச்சிஇ சிறிது தேன் கலந்து குடித்து வர வேண்டும்.
🔷கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள தினசரி இளநீர் பருக வேண்டும்.
🔷ஆண்களை விட பெண்களுக்கு பொதுவாக தூக்கத்தின் தேவை அதிகம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஆண்களை விட பெண்களுக்கு 20 நிமிடம் அதிக தூக்கம் தேவை என்று சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது.
🔷மிளகுக்கீரை, சுவாசத்தை புத்துணர்ச்சியூட்டுவதை விட சுவாசத்தை சீராக்க உதவும்

 

உடல் ஆரோக்கியம் குறிப்புகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்