ஈரானின் வான்வழி தற்காலிகமாக மூடப்பட்டது!

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தனது வான்வழித் தடத்தைத் தற்காலிகமாக மூடியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை வியாழக்கிழமை காலை வரை ஈரானில் அனைத்து விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,ஈரானில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு இந்திய மக்கள் அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்