இலங்கையில் இறந்தவர்களின் அஸ்தியில் ஆபரண தயாரிப்பு
இறந்தவர்களின் அஸ்தியை வைத்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நகைகள் மூலம் வருடாந்தம் 150,000 டொலர் அந்நிய செலவாணியை பெற்றுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.
தற்போது ஆர். கே. எஸ் அஷ்மாஷே ஆபரண வடிவமைப்புகள் ஏற்றுமதி முகவர் மூலமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அத்துடன் இலங்கையில் இன்னும் இவ்வகை நகைகள் அணிவதில் விருப்பம் உள்ளவர்கள் இல்லை என்றாலும், ஐரோப்பா, ஜெர்மனி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த நகைகளுக்கு பெரும் கேள்வி காணப்படுகின்றது.
குறித்த பொருட்களை தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை முதலீட்டு சபை ஏற்கனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்