பல வருடங்களாக சமூக ஊடகங்கள் ஊடாக குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை சேகரித்தவர் கைது

இலங்கையில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனமடுவையைச் சேர்ந்த 34 வயது நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள தேசிய காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகள் மையத்தின் (NCMEC) அறிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேக நபர், பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2022 முதல் சமூக ஊடகங்கள் வழியாக வெளிநாட்டில் வசிக்கும் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சேகரித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நபர் இலங்கையில் 13 வயது குழந்தையின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க