அரசியல் குழுக்களின் அழுத்தங்களில் சிக்காமல் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கவும்!
பல்வேறு அரசியல் குழுக்களின் அழுத்தங்களில் சிக்காமல், ‘அஸ்வெசும’ பயனாளிகள் பட்டியலில் பெயர் இடம்பெறாத அனைவரும் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்குமாறும், மேன்முறையீடுகள் கிடைத்த பின்னர் தகுதியானவர்களை தெரிவு செய்யும் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்