அமெரிக்காவில் அதிகரித்த பனிப்பொழிவு

அமெரிக்காவில் தற்போது நிலவும் அதிக பனிப் பொழிவுடனான குளிர் காலநிலை காரணமாக மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காலநிலையை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதன்காரணமாக அமெரிக்காவின் பல விமான நிலையங்களில் விமானங்கள் தாமதமாவதுடன், பல விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கன்சாஸ் மற்றும் மிசோரி நகரங்களுக்குப் பனிப்புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்போது அங்கு தேங்கியுள்ள பனிக் கட்டிகளை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், தற்போது மத்திய அமெரிக்காவில், மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்