அநுர அரசில் ராஜாங்க அமைச்சர்களுக்கு இடமில்லை
முன்னைய அரசாங்கங்களின் நடைமுறையில் இருந்து விலகி, புதிய அரசாங்கம் ராஜாங்க அமைச்சர்களை நியமிக்க மாட்டாது, ஆனால் அதற்கு பதிலாக 26 – 28 பிரதி அமைச்சர்களை ஓரிரு நாட்களில் நியமிக்கும் என்று நேற்று திங்கட்கிழமை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்னதாக நாட்டிற்கு முன்வைக்கப்பட்ட கொள்கை விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படமாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
சில அமைச்சரவையை இலகுபடுத்துவதற்காக பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்களே தவிர அனைத்து அமைச்சுக்களுக்கும் நியமிக்கப்படமாட்டார்கள். அமைச்சின் செயலாளர்களும் மாற்றப்படுவார்கள், மீண்டும் நியமிக்கப்படுவார்கள் அல்லது புதிதாக நியமிக்கப்படுவார்கள், ஆனால் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்