Sri Lanka Tamil News Site

நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

- Advertisement -

தமிழக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தனது தந்தை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இன்று புதன்கிழமை பதவியேற்றார்.

அவர் பதவியேற்றதன் மூலம் ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதுவரை சிவா வி மெய்யநாதன் வசமிருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சு பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

“நான் அதை ஒரு பதவியாக கருதாமல் பொறுப்புடன் செயல்படுவேன், திமுகவின் வம்ச அரசியலுக்கு எதிராக எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

- Advertisement -

எனினும், எவ்வித விமர்சனங்கள் வந்தாலும், அவற்றுக்கு செயற்பாடுகள் மூலம் பதிலடி கொடுப்பேன்” உதயநிதி டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் தேர்தலில் போட்டியிட்டு உதயநிதி வெற்றிபெற்றார்.

2008 ஆம் ஆண்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற தனது நிறுவனத்தின் மூலம் திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் இறங்கி, சுமார் 15 படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், இன்று அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த உதயநிதி,

இயக்குநர் மாரி செல்வராஜின் மாமன்னன் தான் தனது கடைசிப் படம் என்றும் இதன்பிறகு முடிந்தவரை அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.

- Advertisement -