இஸ்தான்புல் மற்றும் கொழும்பு இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக, துருக்கி ஏயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இலங்கை செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கான சேவையை இது மேம்படுத்தும் என, துருக்கி எயார்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையே நடைபெற்ற இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (CAASL) தேவையான அனுமதியை உடனடியாக வழங்கியுள்ளது.
விரிவுபடுத்தப்பட்ட இந்த சேவை 2026 ஏப்ரல் 5 முதல் ஒக்டோபர் 21 ஆம் திகதிவரை செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.