துருக்கி நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2700 : இது 8 மடங்காக அதிகரிக்கலாம் என எச்சரிக்கை

சிரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள தென்கிழக்கு துருக்கியில் இன்று திங்கட்கிழமை அடுத்தடுத்து இடம்பெற்ற இரு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை தற்பொது வரை 2700 என கணக்கீடப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை எட்டு மடங்கு உயரக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சுமார் 12 மணி நேரம் கழித்து, இரண்டாவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் மேலும் வடக்கே தாக்கியது.

உறைபனி மற்றும் பனிப்பொழிவு நிலைகளில் இடிபாடுகள் நிறைந்த மலைகள் வழியாக மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறப்புக் குழுக்கள், மோப்ப நாய்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட மீட்பு முயற்சிகளுக்கு உதவ உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஆதரவை வழங்கி வருகின்றன.

முதலாவது நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவிலான உள்ளூர் நேரப்படி 04:17 மணிக்கு காசியான்டெப் நகருக்கு அருகே 17.9 கிமீ (11 மைல்) ஆழத்தில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கவியலாளர்கள் கூறுகையில், முதல் நிலநடுக்கம் துருக்கியில் இதுவரை பதிவு செய்யப்படாத மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகும். அதிர்வு நிற்க இரண்டு நிமிடங்கள் ஆனதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர்.

இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக இருந்தது, அதன் மையம் கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தின் எல்பிஸ்தான் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

துருக்கியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,760 , தாண்டியுள்ளது, அதே நேரத்தில் சிரியாவில் 1,000 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை இறந்த நிலையில் மீட்கப்பட்டால் , இதன் எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகமாகும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.