Last updated on April 30th, 2023 at 01:13 pm

நாட்டின் பணவீக்கம் தொடர்பில் வெளியான தகவல்...

நாட்டின் பணவீக்கம் தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்படும் முதன்மை பணவீக்கம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரியில் சிறிதளவு குறைந்துள்ளதாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஜனவரியில் 51.7% ஆக இருந்த முதன்மை பணவீக்கம், பெப்ரவரி இறுதிக்குள் 1.1% ஆல் குறைந்து 50.6% ஆக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், ஜனவரியில் 60% ஆக இருந்த உணவு பணவீக்கம், பெப்ரவரியில் 54.4% ஆகக் குறைந்துள்ளது.

ஒப்பீட்டளவில் இந்த பணவீக்கம் 5.6% ஆல் குறைந்துள்ளதாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஜனவரி மாதத்தில் 47.9% ஆக பதிவான உணவு அல்லாதவற்றின் பணவீக்கம் பெப்ரவரியுடன் உடன் ஒப்பிடுகையில் 0.9 சதவீத்தினால் அதிகரித்து, 48.8% ஆக பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்