பெண் பணிக்குழாமினருடன் பறந்த விமானம்

பெண் பணிக்குழாமினருடன் பறந்த விமானம்

மகளிர் தினத்தை முன்னிட்டு, முழுவதுமாக பெண் ஊழியர்களைக் கொண்ட விமான சேவையொன்றை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இன்று புதன் கிழமை முன்னெடுத்திருந்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருச்சி வரை இந்த விமான சேவையை முன்னெடுத்திருந்தது.

இந்த விமானத்தை வழிநடத்துபராக சாமிக்கா ரூபசிங்க செயற்பட்டதுடன், விமானிகளாக பிமலி ஜயவர்தன மற்றும் ரொஷானி திஸாநாயக்க ஆகியோர் செயற்பட்டனர்.

அத்தோடு உபுலி வர்ணகுல பணிக்குழாம் மேற்பார்வையாளராகவும், லக்மினி திஸாநாயக்க, ஜெயகலனி கின்சன் மற்றும் ஹர்ஷி வல்பொல ஆகியோர் விமான பணிப்பெண்களாகவும் செயற்பட்டனர் என்று தகவல் கிடைத்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்