இரண்டு பயிற்சி விமானங்கள் விபத்து : இருவர் பலி

இரண்டு பயிற்சி விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

இத்தாலியின் – ரோம் நகரில் விமானங்கள் மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.விமானத்தில் பயணித்த விமானிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று செவ்வாய்க்கிழமை விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது இரண்டு விமானங்கள் நடுவானில் நேருக்குநேர் மோதிக்கொண்டதனால் விபத்து நேர்ந்துள்ளதுடன், இரண்டு விமானங்களும் தரையில் விழுந்து தீப்பற்றியுள்ளன.

இதன் போது இரண்டு பயிற்சி விமானத்திலும் பயணித்த விமானிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்