தேர்தலை நடத்துவது தொடர்பில் சந்தேகம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் இன்று செவ்வாய்க்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்ட பிறகு அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் சந்திப்பது இதுவே முதல்முறை.

காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ள இந்த சந்திப்பில் தேர்தல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளுக்கு விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.