வரிவிதிப்பை மீளாய்வு செய்து புதிய சுற்றறிக்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நாணயமற்ற கொடுப்பனவுகளின் வரிவிதிப்பை மீளாய்வு செய்து புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளரின் பணிப்புரையின் பேரில் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் இந்த சுற்றறிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சில பணமல்லா சலுகைகளுக்கு  உழைக்கும்போது செலுத்தும் புதிய வரி (PAYEE Tax) முறைமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஊழியர்களுக்கு பணமல்லா சலுகைகளாக வழங்கப்படும் வாகனம், எரிபொருள் கொடுப்பனவு, வீடு, மருத்துவ வசதிகள் போன்றவற்றுக்கு இவ்வாறு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.