துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின்னர் காணாமல் போய் தேடப்பட்டு வந்த கானா கால்பந்து நட்சத்திரம் Christian Atsu (31 வயது) கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தினால் தற்போது வரை 4,300 க்கும் மேற்பட்டவர்களின் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15,000 பேர் காயம் அடைந்தனர், பலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் மீட்பு பணிகள் தொடர்கின்றன.