வீதியோர வியாபாரத்திற்கு விசேட அனுமதி

வீதியோர வியாபாரத்திற்கு விசேட அனுமதி

நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வீதியின் இருமருங்குளிலும் தங்களது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதியளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகங்களில் அறிவித்த பின்னர் இடையூறின்றி தங்களது உற்பத்திகளை வீதியின் இருமருங்கிலும் பொது மக்கள் விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட அனுமதி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்