சீக்கிய மத போதகர் நவீன ஆடையுடன் நடமாடுவதாக சந்தேகம்

சீக்கிய மத போதகர் நவீன ஆடையுடன் நடமாடுவதாக சந்தேகம்

இந்தியாவின் பஞ்சாப்பில் பொலிஸாரினால் தேடப்பட்டு வரும்  சீக்கிய மத போதகரான அம்ரித்பால் சிங், பாரம்பரிய உடையை களைந்து நவீன ஆடையுடன் நடமாடுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாக அந் நாட்டு தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொலை முயற்சி, சட்ட அமுலாக்கத்தைத் தடுத்தல் மற்றும் நல்லிணக்கத்துக்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில் அம்ரித்பால் சிங்கை கடந்த வாரம் அதிகாரிகள் கைது செய்ய முயன்றபோது அம்ரித்பால் சிங் தப்பிச்சென்றார்.

அமிர்தசரஸில் இருந்து பெறப்பட்ட சீ.சீ.டி.வி காட்சிகளின்படி அம்ரித்பால் சிங் அங்குள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்து, பின்னர் அவர் அங்கிருந்து ஹரியானாவில் உள்ள குருக்ஷேத்ராவுக்குப் புறப்பட்டு சென்றதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
எனினும் இன்னும் அவர் இருக்கும் இடம் கண்டறியப்படவில்லை.

இதேவேளை ஹரியானாவின் குருக்ஷேத்ராவில் உள்ள தனது வீட்டில் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளருக்கும் அடைக்கலம் கொடுத்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்
தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்