பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் நசீரை ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்து கொல்ல சதி நடத்தாகவும் மருத்துவமனை அறிக்கை வாயிலாக இந்த தகவல் தனக்கு தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இம்ரான் நசீர் இது தொடர்பில் தெரிவிக்கையில், “ உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மருத்துவமனையின் அறிக்கை எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு விஷம் கொடுத்தது அப்போது தான் தெரியவந்தது. ஆட்களை மெல்ல கொல்லும் விஷத்தை எனக்கு கொடுத்துள்ளனர்.

அந்த விஷமானது எனது உடல் நிலையை மோசமாக்கியது. என்னுடய மூட்டுகளை அது தாக்கி பாதிப்பை ஏற்படுத்தியது. 8 -10 வருடங்களாக சிகிச்சை எடுத்து வருகிறேன். நான் 6 வருடங்களாக கடுமையாக சிரமப்பட்டேன்.

ஆனால் நான் இப்போது நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். என்னை பார்க்கும் பலரும் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் எனக் கூறுகிறார்கள். எனக்கு நிறைய நபர்கள் மீது சந்தேகம் இருக்கிறது. நான் என்ன சாப்பிட்டேன் எப்போது சாப்பிட்டேன் என எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் அந்த விஷமானது உடனடியாக வேலை செய்யக்கூடியது இல்லை. அது உங்களை வருடக்கணக்கில் மெல்ல கொல்லும். நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. என்னை கொல்ல யார் நினைத்தார்கள் எனத் தெரியவில்லை” என தெரிவித்தார்.

மருத்துவ செலவுக்காக தன்னிடமிருந்த சேமிப்புக்கள் அனைத்தும் தீர்ந்த நிலையில் “ ஷாகித் அப்ரிடி எனக்கு சரியான நேரத்தில் உதவி புரிந்தார் என மேலும் அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்