17 மாணவர்களின் தலை முடியை அலங்கோலமாக வெட்டிய அதிபர்

 

அதிபர் ஒருவர்  இந்த வருடம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள 17 மாணவர்களின் தலை முடியை அலங்கோலமாக வெட்டி,  அவர்களை பாடசாலை தவணைப் பரீட்சைக்கு தோற்ற விடாமல் வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

இச்சம்பவம் கம்பளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவர்கள் தலை முடியை அளவுக்கு அதிகமாக வளர்த்திருந்ததாக தெரிவித்து, அந்த பாடசாலையின் அதிபரும், உப அதிபரும் சேர்ந்து இவ்வாறு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து கம்பளை வலயக்கல்விப் பணிப்பாளருக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து குழு ஒன்றை அமைத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.