தொழிலுக்காக சென்ற 48 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தொழிலுக்காக குவைத் நாட்டிற்கு சென்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் இன்று புதன்கிழமை நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான U.L230 என்ற விமானத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை நாடு திரும்பியுள்ளனர் என கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. .

குவைத்துக்கு தொழில் நிமித்தம் சென்று பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட இலங்கையர்கள் குவைத்துக்கான இலங்கை தூதரகத்திற்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கைக்கான தூதரகத்தின் நடவடிக்கையால் 48 இலங்கையர்களும் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

38 பெண்களும் 10 ஆண்களுமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்