ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

வெள்ளவத்தை அருகே ரயிலில் மோதி நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பாணந்துறையில் இருந்து பொல்காவெல நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க