
போதைக்கு அடிமையான மகனை வெட்டிக்கொன்ற தந்தை
ரிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடலுபொல பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மகனைக் கொன்றதாகக் தெரிவிக்கப்படும் கொலைச் சம்பவம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட 29 வயதுடைய நபர் உறங்கிக் கொண்டிருந்த போது, சந்தேக நபர் கோடரியால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளதாகவும், ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ரிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.