SLFP ன் பதில் பொதுச்செயலாளராக சரத் ஏக்கநாயக்க நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளராக, மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர வெளிநாடு சென்றுள்ளமையால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சரத் ஏக்கநாயக்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதி பொதுச்செயலாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்