Sri Lanka Tamil News Site

வேலை பெற்று தருவதாக மோசடி செய்த 19 வயது இளைஞன் கைது

- Advertisement -

கார் விற்பனை காட்சியறை ஒன்றின் உரிமையாளராகக் காட்டிக்கொண்டு தனிநபர்களிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரை பம்பலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் பம்பலப்பிட்டியில் உள்ள கார் காட்சியறை ஒன்றின் உரிமையாளராக தன்னைக் காட்டிக் கொண்டு துறைமுகத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதாக பேஸ்புக்கில் போலி விளம்பரம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹோட்டல் ஒன்றின் ஊழியரான குறித்த சந்தேக நபர் நீண்டகாலமாக இந்த நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

- Advertisement -

துறைமுகத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதாக அவரால் பதிவிடப்பட்ட போலியான பேஸ்புக் பதிவுகளுக்கு பலியாகியுள்ள பல்வேறு நபர்களிடம் இவர் பணம் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கார் விற்பனை காட்சியறையின் உண்மையான உரிமையாளர் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -