சூடுபிடிக்கும் திருக்கார்த்திகை விளக்கு வியாபாரம்

-யாழ் நிருபர்-

திருக்கார்த்திகை நாளின் விரத உற்சவத்தினை முன்னிட்டு யாழ்.மாவட்டத்தில் உள்ள சந்தை வியாபார நிலையங்களில் திருக்கார்த்திகை விளக்கீட்டுக்கான விளக்குகளை கொள்வனவு செய்வதில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுப்பட்டு வருகின்றனர்.

யாழ். நல்லூர் திருநெல்வேலி வியாபார சந்தைப்பகுதியில் சிறிய சிட்டி விளக்குகள், நிறமுட்டிய விளக்குகள் போன்ற ன விற்பனையில் சூடுபிடித்துள்ளது.

திருக்கார்த்திகை விரத உற்சவத்தில் நாளை கந்தன் ஆலயங்களில் குமராலய சொர்க்கப்பானை தீபமும், நாளை புதன்கிழமை விஷ்ணு ஆலயங்களில் விஷ்ணு சொர்க்கப்பானை தீபமும், வீடுகளில் திருக்கார்த்திகை விளக்குகள் எற்றுதலும் இடம்பெற்றும் என்பது குறிப்பிடத்தக்கது