-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தில் 176 பேருக்கு வழங்கப்பட்ட சுருக்கு வலை அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி இன்று புதன்கிழமை வீதியை மறித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் திருக்கடலூர் வழியாக ஏகாம்பரம் வீதியூடாக வந்து திருகோணமலை- கண்டி பிரதான வீதியிலுள்ள மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் பதாகைகளை ஏந்தியவாறு வீதியில் அமர்ந்த வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடல் வளம் அழிந்து போவதாகவும், மீனவர்களின் தொழில் அற்று போய் வருவதாகவும், அரச அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பில் தெரிந்திருந்தும் எதுவித சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.



