மலேசியாவிலிருந்து இலங்கைக்கு உணவுப் பொதிகள் என்ற பெயரில் கடத்தப்பட்ட 53.6 கோடி ரூபா பெறுமதியான பாரிய போதைப்பொருள் தொகுதியை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை சுங்கப் பிரிவினரின் விசேட சோதனையின் 51 கிலோகிராம் ஹஷிஷ் (இதன் சந்தை மதிப்பு சுமார் 510 மில்லியன் ரூபா), ஒரு கிலோகிராம் ஐஸ் (இதன் சந்தை மதிப்பு சுமார் 25 மில்லியன் ரூபா) மீட்கப்பட்டுள்ளன.
இவை மலேசியாவிலிருந்து இலங்கைக்கு பரிசு பொதிகளாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு 10, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் வசிக்கும் நான்கு இலங்கை பிரஜைகளின் முகவரிகளுக்கே இந்தப் பொதிகள் வந்துள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் அது தொடர்பான சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.