நிறங்கள் மூன்று… 72 லட்சம் பார்வைகளைக் கடந்தது

நிறங்கள் மூன்று படத்தின் டிரைலர் 72 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

தமிழ் திரையுலகிற்கு ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் கார்த்திக் நரேன். இதையடுத்து ‘மாஃபியா’,‘மாறன்’ படங்களை இயக்கினார். இவர் இயக்கிய நரகாசூரன் படம் பல ஆண்டுகளாக வெளியாகாமல் உள்ளது.

தற்போது அவர் நடிகர் அதர்வாவை வைத்து ‘நிறங்கள் மூன்று’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ரகுமான், சரத்குமார், நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். ஐயங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்கள் முன்பு வெளியானது.

சினிமா ஆசை கொண்ட ஒருவன், ஊழல் செய்யும் காவல் துறை அதிகாரி, மாணவர் மூவரையும் மையப்படுத்தி இந்த டிரைலர் உருவாகியுள்ளது. ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களின் கோர்வையாக நிறங்கள் மூன்று படம் உருவாகியிருப்பதாக தெரிகிறது. சில தினங்கள் முன்பு வெளியான இந்த படத்தின் டிரைலர் தற்போது வரை 7.2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

;