-யாழ் நிருபர்-
யாழ். புங்குடுதீவு பகுதியில், இன்று புதன்கிழமை, மோட்டார் சைக்கிளும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதன்போது புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த ரமணன் நிதுசன் (வயது 21) என்ற இளைஞரே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
யாழில் உள்ள விருந்தினர் விடுதியின் பேருந்து ஒன்று, சுற்றுலாப் பயணிகளை ஏற்றியவாறு யாழில் இருந்து புங்குடுதீவு நோக்கி பயணித்தது.
இதன்போது குறிகட்டுவான் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளானது புங்குடுதீவு – மடத்துவெளி பகுதியில் குறித்த பேருந்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
ஊர்காவல்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.