மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

 

 

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் 2023 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில் இடம்பெற்றது.

இப்போட்டியானது மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் பாடசாலை அதிபர் எம். பத்மநாபன் தலைமையில் இடம் பெற்றது.

இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.குலேந்திரகுமார், சிறப்பு அதிதியாக முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளரும் கல்லூரியின் பழைய மாணவிமான எஸ். சக்கரவர்த்தி மற்றும் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு கல்விவலய உத்தியோகஸ்தர் T.உதயகரன் மற்றும் K. ரவீந்திரன் ஆசிரிய ஆலோசகர் சுகாதாரமும் உடற்கல்வியும் மட்டக்களப்பு கல்வி வலயம் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் மற்றும் ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபரும் வின்சன்ட் பெண்கள் பாடசாலையின் அதிபருமான T.உதயகுமார்  கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் இடம் பெற்ற அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்ததுடன், முதலாம் இடத்தை அருந்ததி இல்லமும், இரண்டாம் இடத்தை நளாயினி இல்லமும், மூன்றாம் இடத்தை சாரதா இல்லமும் பெற்றுக் கொணடது.

இதன் போது, பாடசாலையின் ஆசிரியர்கள்,  பாடசாலை மாணவர்களும், பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள்,  மற்றும் பொதுமக்கள் என பலரும் கொண்டு சிறப்பித்தனர்.