Sri Lanka Tamil News Site

மட்டு.காத்தான்குடியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

- Advertisement -

மட்டக்களப்பு பாலமுனை கடற்கரையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை கடற்கரையிலிருந்து இன்று சனிக்கிழமை காலை இச்சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் தமது தோட்டத்திற்கு சென்று வருவதாக தெரிவித்து வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இன்று காலை கடற்கரையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் மனோகரன் (69 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வி. தியாசரின் உத்தரவிற்கமைய, சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்ட காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன், பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

- Advertisement -