இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களின் பின்னணியில் ஆசிய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் சரிந்துள்ளன.
மேலும் எரிபொருள் விலைகளும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென் கொரியாவின் கோஸ்பி (Kospi) சந்தை ஆரம்பத்தில் 7% சரிவைச் சந்தித்தது, தற்போது 6% சரிவில் உள்ளது.
ஜப்பானின் நிக்கேய் 225 (Nikkei 225) பங்குச் சந்தை 3.6% வீழ்ச்சியடைந்தது.
அவுஸ்திரேலியாவின் ஏஎஸ்எக்ஸ் 200 (ASX 200) 1.8% சரிந்தது.
ஹொங்கொங்கின் ஹாங் செங் (Hang Seng) சந்தையும் சரிவைச் சந்தித்துள்ளது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்து சீராக இருந்தபோதிலும், இன்று காலை நிலவரப்படி அமெரிக்க கச்சா எண்ணெய் மற்றும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலைகள் 1.2% உயர்ந்துள்ளன.