-அம்பாறை நிருபர்-
பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறான நடைபாதை வியாபாரிகளை, அகற்றும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் இந்நடவடிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட விபத்துக்கள், மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில், பிரதேச சபை நகரின் அழகினை மெருகூட்டுவதற்காகவும், விசாலமான வீதி ஊடாக பாதுகாப்பான போக்குவரத்து வசதியினை மேற்கொள்ளும் வகையிலும் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் பொலிஸார், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து இச்செயற்பாட்டினை முன்னெடுத்திருந்து வருகின்றனர்.