விபத்தில் 18 வயதுடைய இரு இளைஞர்கள் பலி

பண்டாரகம மொரந்துடுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 18 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இருவரும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் ரேஸில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.