ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில், 60 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில் இழுத்திருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹாலி-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.