
மட்டக்களப்பு, கருவேப்பங்கேணியில் ஏப்ரல் 21 உயிர் நீத்தவர்களுக்காக அஞ்சலி
மட்டக்களப்பு, கருவேப்பங்கேணி புனித சூசையப்பர் தேவாலயத்திற்கு அருகாமையில் இன்று திங்கட்கிழமை காலை 6 மணி அளவில் ஏப்ரல் 21 உயிர்த்தஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
2019 ஆண்டு ஏப்ரல் 21 உயிர்த்தஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 31 உயிர்களுக்கும் விளக்குகள் ஏற்றப்பட்டு, மலர்கள் தூவப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் இதன்போது தேவாலயத்தின் பங்குத்தந்தை ஜோச் ஜீவராஜ் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் கிராமத்தின் பொதுமக்கள், மற்றும் இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

